ரூ.16 கோடி மோசடி புகார்   கேரள மாநிலம் கோவளத்தில் ஹரி நாடார் கைது

by Editor / 05-05-2021 06:17:10pm
ரூ.16 கோடி மோசடி புகார்   கேரள மாநிலம் கோவளத்தில் ஹரி நாடார் கைது

 


16 கோடி மோசடி செய்த புகாரில் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களிலேயே மிக அதிக வாக்கு வாங்கியவர் ஹரி நாடார்,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஹரிநாடார் 37,727 வாக்குகளை அள்ளினார். அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கும் இவருக்கும்  இடையேயான வாக்கு வித்தியாசம் 3,539 மட்டுமே ஆகும். ஹரிநாடார் 37,727 வாக்குகள் வாங்கியதன் மூலம் திமுகவின் பூங்கோதை நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் ஹரிநாடார் 12 கிலோ எடை கொண்ட நகைகளை எப்போதும் அணிந்திருப்பார். அண்மையில் விமான நிலையத்தில் நகைக்கான பில் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கேள்வி எழுப்பியதுடன் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தனர். 
இதன் பேரில் திருவனந்தபுரத்தில் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிதாக பேசப்பட்டது.இந்த சூழலில் 16 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதா தகவல்கள் வெளியாகி உள்ளன.எங்கு நடந்த மோசடி என்பது குறித்து காவல்துறை சார்பிலோ அல்லது கைது குறித்து ஹரி நாடார் சார்பிலோ எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 16 கோடி மோசடி செய்ததாக ஹரி நாடார் கைது செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via
Logo