திருமலை திருப்பதி தேவஸ்தான  தமிழக தலைவராக மீண்டும்  ஏ.ஜே. சேகர் ரெட்டி பதவி ஏற்பு

by Editor / 06-10-2021 04:16:15pm
திருமலை திருப்பதி தேவஸ்தான  தமிழக தலைவராக மீண்டும்  ஏ.ஜே. சேகர் ரெட்டி பதவி ஏற்பு

சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக தலைவராக ஏ.ஜே. சேகர் ரெட்டி பொறுப்பேற்றுக் கொண்டார். தலைவர் சுப்பா ரெட்டி, பொறுப்பேற்றதற்கான கடிதத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நிர்வாகக் குழு உறுப்பினர் சங்கர், வேமிரெட்டி பிரபாகர் ரெடடி எம்.பி. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


நீண்ட நாள் கோரிக்கையாக தமிழகத்தில் திருப்பதி போன்ற கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இப்போது அரசு சார்பில் 2 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிட் (கொரரோனா) காரணமாக பணிகள் கிடப்பில் இருந்தது. எனவே, மீண்டும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு தமிழக முதல்வரை சந்தித்து விரைவில் அந்த நிலத்தை தேவஸ்தானத்திற்கு வழங்கினால் உடனடியாக அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என தலைவர் ஏ.ஜே. சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.


இதேபோல, ராயப்பேட்டையில் ஏழைகளுக்கு பயன்படும் வகையில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் தற்போது நடைபெற்றும் வரும் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக ஆக்கிர மிப்பு செய்யப்பட்டிருந்த கோயில் நிலங்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மீட்டு வருகிறார். இது மிகமிக வரவேற்கத் தக்கது.சென்னை தியாகராயநகரில் பத்மாவதி தாயார் கோவில் கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் ஓராண்டில் நிறைவடைந்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.


அதேபோல பக்தர்கள் நலன் கருதி சென்னை-திருப்பதி வழித்தடத்தில் 3 இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட இருக்கிறது. இதில் நடைபயணமாக வரும் பக்தர்கள் தங்கி, ஓய்வு எடுத்து செல்லலாம். அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டும் செல்லலாம். குளியலறை, கழிவறை, ஓய்வறை என அனைத்து சேவைகளும் இலவசமாகும். அடுத்த புரட்டாசி மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு விடுதிகளாவது நிச்சயம் அமைக்கப்பட்டிருக்கும் என்று உறுதியளிக்கிறோம்.


சென்னையில், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய கோவில் கட்டுவதற்காக பழைய மகாபலிபுரம் சாலை (ஓ.எம்.ஆர்.), கிழக்கு கடற்கரை சாலை (இ.சி.ஆர்.) என 2 இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது. இந்த இடங்கள் வாஸ்து சாஸ்திரப்படி இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ந்து, தகுந்த இடத்தை தேர்வு செய்து தமிழக அரசிடம் அளிப்போம். அதன்பின்பு அரசு அனுமதி அளித்த உடன் கோவில் கட்டுமான பணி தொடங்கப்படும். இதற்காக விரைவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


ஏ.ஜெ.சேகர் ரெட்டி நிருபர்களிடம் பேசுகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் ஏழை மக்கள் நலனுக்காக திருமண மண்டபம் கட்டித்தர திட்டமிட்டுள்ளோம். திருப்பதி அடிவாரத்தில் பசுக்கள் கோவில் திறக்கப்பட இருக்கிறது. இங்கு நிறுவப்படவுள்ள ‘கோ துலாபாரம்’ (பசுக்கள் எடையில் காணிக்கைகளை வழங்கும் தராசு) உலகளவில் பிரசித்தி பெறப்போகிறது. இந்த கோவிலை ஆந்திரா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வருகிற 11-ந்தேதி திறந்து வைக்கவுள்ளார் என்றார்.

 

Tags :

Share via