பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

by Editor / 08-05-2023 11:40:39am
பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி  உள்ளது. இந்நிலையில், பலருக்கும் எங்கே படிப்பது, எந்த கல்லூரியில் என்ன கோர்ஸ் எடுப்பது என்பது போன்ற தெளிவான திட்டமிடல் இல்லை. இதனால், நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக இலவச ஆலோசனை வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எந்த கல்லூரியில் படிக்கலாம், உதவித்தொகை குறித்த ஆலோசனைகள் என அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டலுக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

Tags :

Share via