கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட 243 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர்.
கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட 243 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர்.
.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது காரை சோதனையிட்ட போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது. காரை ஓட்டி வந்த திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (42) மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அம்மர் (23) ஆகிய இருவரும் நாலாட்டின்புதூர் போலீசார் கைது செய்தனர். சோதனையின்போது 243 கிலோ புகையிலை பொருட்கள், மற்றும் ரொக்க பணம் ரூபாய் 2, லட்சத்தி 75, ஆயிரம் மற்றும் கார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
Tags :



















