தென்காசியில் பரபரப்பு. காதலி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை.

தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளம் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் சிதலடைந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போது, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த திருமணமான பாலகிருஷ்ணன் என்ற நபரும், உயிரிழந்த மணிமேகலையும் காதலித்து வந்ததாகவும், பாலகிருஷ்ணனை திருமணம் செய்ய சொல்லி மணிமேகலை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த நிலையில், தான் திருமணம் செய்து கொள்வதாக மணிமேகலை பாலகிருஷ்ணன் அழைத்து அவரது கழுத்தை நெரித்து அவரது முகத்தில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில், பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இது தொடர்பான வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்றைய தினம் வழக்கின் மீதான விசாரணை நிறைவு பெற்று குற்றவாளியான பாலகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராஜவேலு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
Tags : தென்காசியில் பரபரப்பு. காதலி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை