மின்வாரிய பொறியாளர் மனைவியுடன் கைது
சிவகங்கை அருகே தென்னலிவயலை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக மஸ்கட்டில் வேலை பார்த்து வருந்தவர்.
விஜயலட்சுமி கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்டவர். அவருக்கு நவபாரதி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. நவபாரதியின் கணவர் செந்தில்குமார் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் விஜயலட்சுமியிடம் உள்ள பணத்தை கொடுத்தால், ஓராண்டில் இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி வங்கி கணக்கு மூலமாக பல முறை ஒரு கோடியே 29 லட்சம் ரூபாயை நவபாரதிக்கும், நவபாரதியின் கணவர் பெயரிலும், அவர்கள் சொன்ன பெயர்களுக்கு வங்கி பணபரிமாற்றம் செய்துள்ளார்கள்.
கடந்த ஓராண்டான பின்பு முதிர்வு தொகை கிடைக்க வேண்டிய நேரத்தில் பணம் கேட்தற்கு பணம் தராமல் இழுத்தடித்து ஏமாற்றி வருவதோடு, கொலை மிரட்டல் விட்டதால் சிவகங்கை விஜயாலட்சுமி மாவட்ட குற்ற பிரிவில் அளித்த புகாரில் தஞ்சாவூரை சேர்ந்த நவபாரதி, அவரது கணவர் செந்தில்குமார் இருவரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இரட்டிப்பு பண ஆசை காட்டி ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி கைதான நிலையில், மேலும் தஞ்சையை சேர்ந்த ஜெயஸ்ரீ, தேவி கரிகாலன், உமாவதி பிரியங்கா உமாவதி லதா மகேஸ் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
Tags :