ஈரோடு மாநகராட்சியை தனிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றிய திமுக

by Editor / 22-02-2022 08:18:35pm
ஈரோடு மாநகராட்சியை தனிப் பெரும்பான்மையுடன்  கைப்பற்றிய திமுக

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாநகராட்சி உட்பட்ட வாக்குகள்  எண்ணும் மையம் சித்தோடு ஐ ஆர் டி டி கல்லூரியில் இன்று நடைபெற்றது.ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 51-வது வார்டில் திமுகவைச் சேர்ந்த விஜயலட்சுமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து 59 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக 44 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஈரோடு மாநகராட்சியை கைப்பற்றியது. அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மூன்று இடங்களிலும் மதிமுக ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது, அதேபோல் அதிமுக 6 இடங்களிலும், சுயச்சை 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஈரோடு மாநகராட்சி 1வது வார்டு ஜமுனாராணி திமுக, 2-வது வார்டு ஜெகதீஷ் திமுக, 3வது வார்டு நிர்மலாதேவி அதிமுக, 4வது வார்டு மங்கையர்கரசி திமுக, 5வது வார்டு கௌசல்யா திமுக, 6வது வார்டு தமிழ்பிரியன் திமுக, 7வது வார்டு சாபிரா பேகம் சுயேட்சை, 8வது வார்டு ஸ்ரீ ஆதி ஸ்ரீதர் திமுக, 9வது வார்டு ஜெகநாதன் திமுக, 10வது வார்டு குமரவேல் திமுக, 11வது வார்டு தங்கமுத்து அதிமுக, 12வது வார்டு ஜெகதீசன் திமுக, 13-வார்டு முருகேசன் திமுக, 14வது வார்டு புனிதா திமுக, 15வது வார்டு ஹேமலதா அதிமுக, 16வது வார்டு ஈபி ரவி காங்கிரஸ், 17வது வார்டு மல்லிகா நடராஜன் திமுக, 18-வது வார்டு சுப்பிரமணியம் திமுக, 19 வது வார்டு  மணிகண்ட ராஜா திமுக,  20-வார்டு மோகன்குமார் திமுக, 21வது வார்டு செல்வராஜ் திமுக, 22வது வார்டு வனிதாமணி மதிமுக, 23வது வார்டு சுகந்தி திமுக, 24வது வார்டு பழனிச்சாமி திமுக,  25வது வார்டு ரவி திமுக, 26வதுவார்டு சரண்யா திமுக, 27வது வார்டு ஜெயந்தி திமுக, 28வது வார்டு செந்தில் சுயேட்சை, 29-வது வார்டு செல்லப்பொண்ணி மனோகரன் திமுக,  30வது வார்டு கீர்த்தனா திமுக, 31வது வார்டு ஜெகதீஷ் அதிமுக, 32வது வார்டு புனிதா திமுக, 33வது வார்டு ஜெயமணி திமுக, 34வது வார்டு ரேவதி திமுக, 35-வது வார்டு புவனேஸ்வரி திமுக,  36-வது வார்டு செந்தில்குமார் சுயேட்சை, 37வது வார்டு தீபலட்சுமி திமுக, 38வது வார்டு மங்கேஸ்வரி காங்கிரஸ்,  39-வது வார்டு கீதாஞ்சலி திமுக, 40வது வார்டு ரமேஷ் சுயேட்சை, 41வது வார்டு தண்டபாணி திமுக,  42வது வார்டு மேனகா திமுக, 43வது வார்டு சபுராமா மின்ஹாஜ் காங்கிரஸ், 44வது வார்டு சசிகுமார் திமுக, 45வது வார்டு பிரவீனா திமுக, 46வது வார்டு மோகனா திமுக, 47வது வார்டு நந்தகோபு திமுக, 48வது வார்டு தங்கவேல் அதிமுக, 49வது வார்டு கோகிலவாணி திமுக,  50வது வார்டு நாகரத்தினம் திமுக,  51வது வார்டு விஜயலட்சுமி திமுக போட்டியின்றி தேர்வு,  52வது வார்டு சாந்தி பாலாஜி திமுக, 53வது  வார்டு ரமணி திமுக, 54வது வார்டு பாரதி அதிமுக, 55வது வார்டு சுபலட்சுமி திமுக, 56வது வார்டு செந்தில்குமார் திமுக,  57வது வார்டு ராமலிங்கம் சுயேட்சை,  58வது வார்டு குணசேகரன் திமுக, 59-வது வார்டு சக்திவேல் திமுக, 60வது வார்டு தண்டபாணி சுயேட்சை ஆகிய வெற்றி பெற்றுள்ளனர்.

 

Tags : DMK captures Erode Corporation with a simple majority

Share via