மேற்கு வங்க மாநிலங்களில் பெருமளவு கஞ்சா பறிமுதல்

by Admin / 31-01-2022 04:42:10pm
மேற்கு வங்க மாநிலங்களில் பெருமளவு கஞ்சா பறிமுதல்

அஸ்ஸாம்  மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து ஏராளமான கஞ்சா பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் எல்லைப் பகுதியில் சமீப காலமாக போதைப்பொருள்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இநிலையில் கரிம்கஞ் என்ற  இடத்தில் அசாம் மாநில போலீசார் நடத்திய சோதனையில் திரிபுராவில் இருந்து கடத்தி வரப்பட்ட2. 360 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் புர்ப பரந்தாமன்  என்ற மாவட்டத்தில் நடத்திய சோதனையில் 824 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இரு நிகழ்வுகளிலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


 

 

Tags :

Share via

More stories