நெல்லை வாகன தணிக்கையில் பயங்கர ஆயுதங்களுடன் 16 பேர் கைது.

by Editor / 14-11-2023 09:09:28pm
நெல்லை   வாகன தணிக்கையில் பயங்கர ஆயுதங்களுடன் 16 பேர் கைது.

தேவேந்திர குல எழுச்சிய இயக்கத்தின் தலைவர் கண்ணபிரான் முறப்பநாடு பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு இரண்டு காரில்  நெல்லையை நோக்கி திரும்பியபோது நெல்லை கே.டி.சி. நகர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையின்  போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த 16 பேரை கைது.செய்து  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் காரில் இருந்து ஐந்து அரிவாள், 6 பெட்ரோல் குண்டுகள், மற்றும் சில ரசாயண பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்தநிலையில் தேவேந்திரகுல எழுச்சிய இயக்கத்தின் தலைவர் கண்ணபிரான் மீது 
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பேசியது தொடர்பாக  இன்று தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : நெல்லையில்வாகன தணிகையின்போது பயங்கர ஆயுதங்களுடன் 16 பேர் கைது.

Share via

More stories

Logo