நவோதயா பள்ளிகளை தொடங்க நிலங்களை அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 3 மாத அவகாசம் .
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தொடங்க நிலங்களை அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 3 மாத அவகாசம் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நவோதயா பள்ளிகளை அமைக்க மாட்டோம் என்ற தமிழக அரசின் போக்கு மாற வேண்டும் என்று நீதிபதிகள் டிவி நாகரத்தினம் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களின் நிறுவுவதற்கு நிலங்களை கண்டறிவதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் திரும்ப பெற மறுத்ததோடு மூன்று மாத அவகாசம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தி மொழி கற்பிக்கப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு கொள்கைகளுக்கு எதிராக மாநில அரசு எடுக்க முடியாது என்று கூடுதலாக ஒரு மொழியை கற்பதின் மூலம் மாநிலத்தின் கல்வி தரம் குறைந்து விடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஜெய் வீக் குப்தா 1968 முதல் இரு மொழி கொள்கை சட்டபூர்வமாக பின்பற்றி வருவதை சுற்றி காட்டியதோடு நவோதயா பள்ளிகளின் மும்மொழி கொள்கை தமிழக அரசின் கொள்கைக்கு எதிரானது என்றும் இது தமிழினுடைய முக்கியத்துவத்தை குறைத்து விடும் என்றும் வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசு செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு காண வேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 14., 2026 நடைபெறும் .
Tags :



















