பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 159இடங்களில் முன்னிலை

by Admin / 14-11-2025 09:39:13am
 பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 159இடங்களில் முன்னிலை

இந்திய அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்து விட்டன. சட்டமன்றத் தேர்தல் 2025 வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக கூட்டணி முன்னிலை வகித்த வரு கின்றது. இதுவரை 243 தொகுதிகளில் என் டி ஏ அதாவது பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 159இடங்களில் முன்னிலை வகித்துவரு கின்றது. காங்கிரஸ் கூட்டணி ஆகிய இந்தியா கூட்டணி என்பது 77 இடங்களிலும் அரசியல் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரின் கட்சி மூன்று இடங்களிலும் பிற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. கூட்டணி கட்சிக்குள் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான பாரதிய ஜனதா கட்சி எண்பத்தி ரெண்டு இடங்களிலும் ஆர் ஜே டி தேஜஸ்வி கட்சி 64 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.. பெரும்பான்மைக்கு தேவையான அதாவது 122 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா கூட்டணி 160 இடங்களில் தொடர்ந்து வலுவான முன்னணியில் உள்ளது...

 

Tags :

Share via