23 மீனவர்கள் கைது - ராமதாஸ் கண்டனம்

by Editor / 04-02-2024 03:11:15pm
23 மீனவர்கள் கைது - ராமதாஸ் கண்டனம்


இலங்கை கடற்படையால் மேலும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், கடந்த மாதத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. தற்போது மேலும் 23 மீனவர்களை கைது செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிங்களப்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via