தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சிறைக்கு சென்று மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து ஆறுதல்

by Admin / 28-07-2026 01:14:37am
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சிறைக்கு சென்று மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து ஆறுதல்

கோவில்பட்டியில் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜயை எலும்புகளை முறிப்பேன் என்கிற ரீதியில் பேசியதாக தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் அனைத்து புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஜூலை 20 அன்று மார்க்கண்டேயனை கைது செய்து தூத்துக்குடி நீதிமன்ற உத்தரவின்படி 15 நாட்கள் காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவரை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சிறைக்கு சென்று மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இவருடன் முன்னாள் சபாநாயகர் அப்பாவும் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்றிருந்தனர். சிறைச்சாலை சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் திமுகவினர் மீது தமிழக வெற்றிக்கழக அரசு தொடர்ந்து பொய் வழக்குகளை போட்டு வருவதாகவும் இந்த அரசுக்கு வேறு எந்த ஆக்கபூர்வமான வயலையும் இல்லை என்றும் எதிர் கட்சிகளை பழி வாங்குவதையும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு சோபா கொடுத்து விலைக்கு வாங்க முயல்வதி மட்டுமே முழுநேர வேலையாக செய்து வருகிறது என்றும் விசா மற்றும் அவசர நிலை போன்ற அடக்குமுறைகளையே எதிர்கொண்ட இயக்கம் திமுக என்பதால் தமிழக வெற்றிக்கழக அரசின் மிரட்டல்களுக்கோ கைதுகளுக்கும் திமுகவினர் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள் என்றும் தெரிவித்ததோடு மார்க்கண்டேயனுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் திமுக தலைமை முழுமையாக வழங்கும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo