அறுபடை வீடுகளில் சூரபத்மன் எனும் தீய்மையை அழிக்கும் நாள் -சூரசம்ஹாரம் -
கந்தசஷ்டி ,முருகனுக்காக இருக்கும் விரதம்.ஆறாவது நாளான கடைசி தினத்தில்சூரசம்ஹாரம் , முருகபெருமான் தம் வேலால் சூரபத்மனை குத்தி கொன்ற தெய்வீக நிகழ்வு .இதுசூரசம்ஹாரம் கடவுள்நம்பிக்கையின் வெளிப்பாடாக நிகழ்த்தப்பெறுவது .சூரபத்மன் ,சிம்மமுகன் மற்றும் தாராகாசூரன் ஆகியோர் தலைமையேற்று தேவர்களை வென்று பூமியை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தார்கள். அவர்களின் வெற்றியால் மண்ணுலகத்தினர் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர்.அதர்மம் தலைதூக்கியது.எங்கும் துயரஒலிகளேகேட்க ஆரம்பித்தன. இக்கொடுமையை கண்டு பொறுக்காத பிரம்மா,தேவர்கள்,மனித குலத்தினர் அனைவரும் சேர்ந்துசிவபெருமானை தரிசித்த அசுரர்களை அழிக்க இறைஞ்சி வேண்டினர். முருகபெருமான் விண்ணுலகையும் மண்ணுலகையும் காக்க இருவருக்கும் மகனாக ப்பிறந்தார். அசுரர்களுடன் ஐந்து நாட்கள் போரிட்டு அசுரர் கூட்டத்தை
வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்த முருகன். ஆறாம் நாள் சூரபத்மனுடன் கடுமையாகப் போர் புரிந்து,அவன் உடலை தம் வேலால் துளைக்க,சூரபத்மனோ ஒரு பெரிய மாமரமாக மாறினான்.இந்நிலையில்,முருகபெருமான் தனது வேலால்மரத்தை செங்குத்தாக இரண்டு துண்டுகளாக வெட்டினார்.இரண்டு துண்டுகளில் ஒன்று மயிலாகவும் மற்றொன்று சேவலாகவும் மாறியது.இதுவே சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது.மயில் வாகனமாகவும் சேவல் வெற்றிக்கொடியின் இலச்சினையாகவும் முருகனின் அடையாளமாக மாறிவிட்டது. சூரபத்மனை அழித்த முருகன் தம் தந்தையை வணங்கி,பிரம்மாவிம் பேரனும் விஸ்வகர்மாவின் மகனுமாகிய மாயன் கட்டிய திருச்செந்தூர் கோவிலில் உடனுறைந்தார் என்கிறது
கந்த புராணம் . அறுபடை வீடுகளில் குருஸ்தலம் என்று போற்றப்படும் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹாரம் மிகவும் புகழ்பெற்றது.
Tags :