பாஜக நிர்வாகிகள் இனி பேட்டி அளிக்கக்கூடாது அண்ணாமலை

by Staff / 22-11-2022 01:06:22pm
பாஜக நிர்வாகிகள் இனி பேட்டி அளிக்கக்கூடாது அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் இனி கட்சியின் ஒப்புதல் பெற்றே யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால், அதை கட்சியின் ஊடகப்பிரிவு தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.சமீபத்தில் பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா, பெண் பாஜக நிர்வாகி ஒருவரை ஆபாசமாக பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய காணொளி சர்ச்சையான நிலையில், அண்ணாமலை இந்த  அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via