அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

by Admin / 16-03-2026 11:10:59am
அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் தமிழக முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது .2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் ,அதற்கான தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சார உத்திகள் குறித்து ஆலோசிக்கப்படுகின்றது. இதில் தமிழகம் முழுவதிலும்  இருந்து திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். தேர்தல் களத்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைகளும்  இதில்  இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது . தேவைகளை உள்ளடக்கிய திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்த இறுதி கட்ட ஆலோசனைகளும் இதில் இடம் வாய்ப்பு உள்ளது. இக்கூட்டத்தின் காரணமாக, பொதுவுடமை கட்சிகளின்  தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்..

 

Tags :

Share via

More stories