கேரளா சென்ற ரயிலில் 6.5 கிலோ கஞ்சா பறிமுதல்:

by Editor / 22-03-2025 11:15:06pm
கேரளா சென்ற ரயிலில் 6.5 கிலோ கஞ்சா பறிமுதல்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக வடமாநிலங்களில் இருந்து சென்னை-அரக்கோணம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு சிலர் கஞ்சாவை  கடத்திவருவதாக புகார்கள் எழுந்தது.இதையடுத்து,அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் தலைமையில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூர் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படையினர்  பெரம்பூரில் ரயில் நிலையத்திலிருந்து  இருந்து அரக்கோணம் வரை சோதனை நடத்தினர். அப்போது,பொது பயணிகள் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 2 பையை சோதனை செய்தனர். அதில்,6.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.3.25 லட்சம் ஆகும்.இதையடுத்து,கஞ்சா கடத்திய நபர்கள் யார் என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,பறிமுதல் செய்யப்பட்ட 6.5 கிலோ கஞ்சாவை காஞ்சிபுரத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. .

 

Tags : கேரளா சென்ற ரயிலில் 6.5 கிலோ கஞ்சா பறிமுதல்:

Share via