பள்ளியை சுத்தம் செய்த மாணவர்கள்.. வைரல் வீடியோவால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

by Editor / 17-04-2025 04:34:20pm
பள்ளியை சுத்தம் செய்த மாணவர்கள்.. வைரல் வீடியோவால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஆவாரங்குப்பம் என்ற பகுதியில், அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களிடம் துடைப்பத்தை கொடுத்து தண்ணீர் தொட்டியையும், பள்ளி வளாகத்தையும் சுத்தம் செய்ய ஆசியர்கள் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து மாணவர்களும் பள்ளியை சுத்தம் செய்யத்தொடங்கினர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் பரவியது. அதனைத் தொடர்ந்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாராணியை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via