தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

by Editor / 19-06-2024 06:58:15am
தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூன் 19) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

Share via