கைதிக்கு செல்போன் கொடுக்கும் போலீஸ்

by Staff / 02-04-2023 01:47:23pm
கைதிக்கு செல்போன் கொடுக்கும் போலீஸ்

ஓஎல்எக்ஸ் மொபைல் ஆப் மூலம் ஒரே வீட்டை 10க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒத்திக்கு விடுவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இந்திரா என்பவர் மதுரை மாவட்டம் மேலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது 15 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடியவுள்ள நிலையில் காவல்நீட்டிப்புக்காக சிறையில் இருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு காவல்துறை மூலம் அழைத்துவரப்பட்டார். அப்போது விசாரணைக்காக காத்திருந்த கைதிக்கு தங்கள் செல்போனை பேசுவதற்காக காவல்துறையினரே கொடுத்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.

 

Tags :

Share via

More stories