பருத்திவீரன் பாட்டி மரணம் 

by Editor / 07-05-2021 04:08:44pm
பருத்திவீரன் பாட்டி மரணம் 

 

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிகராக அறிமுகமான படம் - பருத்திவீரன். இந்தப் படத்தில் அப்பத்தாவாக நடித்து கவனம் பெற்றார் பஞ்சவர்ணம்.இந்நிலையில் உடல்நலக்குறைவால் காலமானார் பஞ்சவர்ணம். இதையடுத்து நடிகர் கார்த்தி ட்விட்டரில் கூறியதாவது:
பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via