தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

by Admin / 05-03-2026 11:21:49pm
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த இடத்திற்கு ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆர்.என். ரவி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசுடன் ஆர்.என். ரவி தொடர்ந்து மோதல் போக்கிலிருந்து வந்த நிலையில், நான்கு ஆண்டு காலத்திற்குப் பிறகு அவர் மாற்றப்பட்டுள்ளார்.இந்த நியமனம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முறைப்படி மாநில அரசுடன் மத்திய உள்துறை அமைச்சர் கலந்தாலோசிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். 

 

Tags :

Share via

More stories

Logo