டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட160 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம்
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட160 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காளி மது பாட்டில்களை ஒப்படைப்பவர்களுக்கு பத்து ரூபாய் திரும்ப வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மூலம் பாட்டில்களை திரும்ப பெற்று அதை ஸ்கேன் செய்வது போன்ற கூடுதல் பணி சுமையின் காரணமாக விற்பனையில் காலதாமதம் ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டி காளி பாட்டுகளை சேகரிக்கும் பணிகளுக்கு தனியாக ஒப்பந்த நிறுவன ஊழியர்களின் நியமிக்க வேண்டும் என்றும் கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்து முன்னறிவிப்பின்றி கடைகளை அடைத்து 930 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை அடிப்படையாகக் கொண்டு டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் கேட்டு முதலில் மெமோ அனுப்பியது. மெமோவிற்கு எந்தவிதமான விளக்கமும் அளிக்காமல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக 160 ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் நிர்வாகம் அளித்த காலக்கழுவிற்குள் பணிக்கு வராத ஊழியர்கள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags :


















