காங்கிரசார் கருத்துக்கு ஜகதீப் தன்கர் கண்டனம்
வங்காளதேசத்தில் நடந்ததது இந்தியாவிலும் நடக்கலாம் என்ற காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித்-ன் கருத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பவள விழாவில் பேசிய ஜககீத் தன்கர், "ஜாக்கிரதையாக இருங்கள், அண்டை நாட்டில் நடப்பது நமது பாரதத்திலும் நடக்கும் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த நாட்டின் குடிமகனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து கொண்டு எப்படி இவ்வாறு பேச முடிகிறது" என்று கேள்வியெழுப்பி உள்ளார்.
Tags :