ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு- அதானி குழுமம் அறிக்கை

by Staff / 11-08-2024 12:45:12pm
ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு- அதானி குழுமம் அறிக்கை

ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிப்பதாக அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் SEBI தலைவர் மாதபி புச்-க்கு பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், "ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டில் உண்மை இல்லை என உறுதியான பிறகும், அதே குற்றச்சாட்டை மறுசுழற்சி செய்து வெளியிடப்பட்டுள்ளது" என அதானி குழுமம் கூறியுள்ளது.

 

Tags :

Share via