காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு

by Staff / 16-09-2022 03:54:51pm
காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை! அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9-ம் தேதி வரை விடுமுறை. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை விடுமுறை. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 10-ல் பள்ளிகள் திறப்பு. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு. எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை
 

 

Tags :

Share via