தீபாவளிக்கு 16 இடங்களில் இருந்து 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை நந்தனத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தீபாவளியை முன்னிட்டு கிளாம்பாக்க பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் பேருந்துகளை இயக்கினால், கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதனால் 16 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் வழக்கமாக 7,427 பஸ்கள் இயக்கப்படும் நிலையில் தீபாவளிக்கு15,659 பஸ்கள்இயக்கப்பட உள்ளதாகவும் ,1459 தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர் பேருந்துகளில் குடிநீர் வசதி செய்யப்பட உள்ளதாகவும் பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளுக்கான இடங்களை எஸ் இ டி சி செயலி வழியாக தெரிந்து கொள்வது முடியும் என்றும் தனியார் பேருந்துகள் அதிக பேருந்து கட்டணங்களை வசூலித்தால் தீபாவளிக்கு பிறகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
Tags :

















