கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் பொய்யானது என தெரிய வந்துள்ளது.

by Admin / 13-03-2026 12:02:42am
கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் பொய்யானது என தெரிய வந்துள்ளது.

சென்னை அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மார்ச் 9ஆம் தேதி திருச்சியை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி அளித்த கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் பொய்யானது என தெரிய வந்துள்ளது. சென்னையில் விடுதியில் தங்கி இருந்த தன்னை நான்கு பேர் காரில் கடத்திச் சென்று மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாணவி புகார் அளித்திருந்தார். அந்த புகாரை அடுத்து சென்னை காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தியும் ஆதாரங்களை திரட்டியது .விசாரணையில், மாணவி குறிப்பிட்டது போன்ற கடத்தல் அல்லது வன்கொடுமை சமூகங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. படிப்பு சுமை மற்றும் இதர தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே மாணவி இத்தகைய பொய்யான புகாரை அழித்து உள்ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து அந்த புகார் பொய்யானது என தள்ளுபடி செய்யப்பட்டு வழக்கு  முடிக்கப்பட்டது. இதே போன்று சென்னையில் மற்றொரு பெண்ணும் மன அழுத்தம் காரணமாக தன் கடத்தப்பட்டதாக கொடுத்த பொய்யான புகாரை திரும்ப பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via