மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை

by Admin / 08-08-2026 01:02:13pm
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு புதுச்சேரிக்கு வர உள்ளார். இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் அவர் அங்கு நடைபெறும் கோரிமேடு மைதானத்தில் நடைபெறும் குடியரசு தலைவரின் வண்ண விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதோடு தேசியக்கொடி விழிப்புணர்வு யாத்திரையையும் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ரமண மகரிஷி ஆசிரமத்திற்கு செல்கிறார். இந்நிகழ்வுக்கு பின்னர் அவர் புதுடில்லி திரும்புவார். உள்துறை அமைச்சரின் வருகை ஒட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via

More stories

Logo