பெண் சிசுக்கொலை குறித்து வீடியோ வெளியிட்ட தென்காசி இளைஞர் கைது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகனான தீபன் (வயது 33) என்பவர் "உளறிக் கொட்டவா" என்கின்ற பேரில் யூடூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இவரது பெரும்பாலான வீடியோக்கள் ஆண்களுக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிரானதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வெளிவரும் நிலையில், இவர் இதுவரை தனது முகத்தினை மூடியபடியே வீடியோவை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்களை தாழ்த்தி பேசுகிறோம் என்ற பெயரில் பெண் சிசுக்கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக பிரச்சினை சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில், பாடகி சின்மயி உட்பட பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த பிரச்சனை தென்காசி மாவட்ட நிர்வாகம் வரை சென்றது. அதனைத்தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது தீபனை தென்காசி போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : பெண் சிசுக்கொலை குறித்து வீடியோ வெளியிட்ட தென்காசி இளைஞர் கைது



















