கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்-உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணை.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன்ஜாமீன் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த செப்., 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணை



















