வால்பாறையில் கனமழை  கூலங்கள் ஆற்றில் வெள்ள பெருக்கு.

by Editor / 25-05-2025 10:07:53am
வால்பாறையில் கனமழை  கூலங்கள் ஆற்றில் வெள்ள பெருக்கு.

 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் சூறாவழி காற்றுடன் கூடிய  கன மழை பெய்து வருகிறது.  இரவு நேரங்களில் கனமழையும் பகல் நேரங்களிலும்  விட்டு விட்டு மழை  பெய்து வருகிறது  இதனால் இங்கு உள்ள கூலாங்கள் ஆற்றில் நடுமலை ஆறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.  பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பொதுமக்கள் இது பற்றி அச்சப்பட தேவை இல்லை என்றும், பேரிடர் மீட்பு குழுவினர்  தயார் நிலையில் உள்ளார்கள் என்றும் மாவட்ட நிர்வாகம்  மற்றும் வடட்டாசியர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : வால்பாறையில் கனமழை  கூலங்கள் ஆற்றில் வெள்ள பெருக்கு.

Share via