சில வரிகளில் சில செய்திகள்

by Editor / 22-11-2021 04:49:58pm
சில வரிகளில் சில செய்திகள்

உதகை பேரூந்து நிலையத்தில் ரூ.500 கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக 4 பேர் கைது.
உதகை பேரூந்து நிலையத்தில் ரூ.500 கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராதாகிருஷ்ணன், ஆஃதுல்ரகுமான், தீனதயாளன், கோபிநாத் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 51 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த தம்பதி உட்பட 3 பேர் கைது.
கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10.34 லட்சம் மோசடி செய்த தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினேஷ்பாபு என்பவர் அளித்த புகாரில் குருநாதன், அவரது மனைவி பானுப்பிரியா, முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது.
சென்னை வில்லிவாக்கத்தில் மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக்கில் சென்றபோது பேருந்து மோதியதால் ஆத்திரமடைந்து பேருந்து ஓட்டுனரை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். ஓட்டுநரை தாக்கிய மாணவர்கள் சாமுவேல், அருண்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் நவீன் என்பவர் தலைமறைவாக உள்ளார்.


2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் டிச.1 முதல் ஆஸ்திரேலியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விசா வைத்துள்ளவர்கள் ஆஸி. க்கு வரலாம் என பிரதமர் ஸ்காட் மோரிசன் தகவல் அளித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 116 கோடியே 87 லட்சம் கோவிட்19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதார அமைச்சகம்.

வேலூரில் 3 பேர் குண்டர் தடுப்புக் காவலில் அடைப்பு.
வேலூர் மாவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு காட்பாடிபொன்னை காலனியை சேர்ந்த வேலு,அருண்குமார், பார்த்திபன் ஆகிய 3பேரையும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பரிந்துரையின் பெயரில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமரவேல் பாண்டியன் குண்டர் தடுப்பு (GOONDAS ACT) காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி வடக்கு சிலுவைபட்டி சுனாமி நகரை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜேசுராஜ் (28) என்பவர்  5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வனிதா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ஜேசுராஜை கைது செய்தார்.
 

 

 

 

Tags :

Share via