நெல்லை இந்தியா இறையாண்மைக்கு எதிராக பதிவிட்ட விசிக நிர்வாகி மீது வழக்கு.

by Editor / 10-05-2025 11:26:48am
நெல்லை இந்தியா இறையாண்மைக்கு எதிராக பதிவிட்ட விசிக நிர்வாகி மீது வழக்கு.

இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்துக்கு மத்தியில் அசாதாரண சூழல் குறித்து முகநூலில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிட்ட இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்த விசிகவை சேர்ந்த முருகன் கண்ணா என்பவர் மீது இரு பிரிவின் கீழ் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதுடன், உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பியதாக வழக்குப்பதிந்துள்ளனர். முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிடுவோர் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.  சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணிக்க நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிட்ட விசிக நிர்வாகி மீது வழக்கு

Share via