துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான அட்டவணையில் மாற்றங்களை செய்துள்ளது இண்டிகோ

by Admin / 16-03-2026 01:31:21am
துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான அட்டவணையில் மாற்றங்களை செய்துள்ளது இண்டிகோ

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் மற்றும் வான்வழி கட்டுப்பாடுகள் காரணமாக துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான அட்டவணையில் மாற்றங்களை செய்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை மற்றும் வான்வழி போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .தற்போது உள்ள தகவலின் படி இந்த மாற்றங்கள் மற்றும் ரத்து நடவடிக்கை 2026 மார்ச் 28 வரை தொடர் என அறிவிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி மற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன, புவனேஸ்வரத்தில் இருந்து துபாய் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்னதாக இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விமான நிலை சரிபார்ப்பு பக்கத்தில் தங்கள் விமானத்தின் நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .இது தவிர ஏர் இந்தியா மற்றும் எமிரேட்ஸ் போன்ற பிற விமான நிறுவனங்களும் துபாய் நோக்கி தங்கள் சேவைகளை ரத்து செய்தும் விமானங்களை குறைத்தும் உள்ளன.

 

 

Tags :

Share via

More stories

Logo