by Staff /
04-07-2023
05:37:49pm
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மஹுலியா கிராமத்தில் கராமி முர்மு என்ற பெண் தனது 8 மாத குழந்தையை ரூ.800க்கு விற்றுள்ளார். இதுகுறித்து அவரது கணவர் முசு திங்கள்கிழமை போலீஸில் புகார் அளித்தார். கராமி முர்மு கூறுகையில், தங்களுக்கு ஏற்கெனவே ஒரு மகள் இருப்பதாகவும், மற்றொரு குழந்தையை வளர்க்க முடியாததால் விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையை வாங்கிய பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வறுமை காரணமாக ரூ.800 குழந்தை விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :
Share via