திருப்பதி தேவஸ்தான மே மாத ஆராதனை சேவை டிக்கெட்டுகள் திங்கள் கிழமை-[ 19-ஆம் தேதி ] வெளியீடு
திருமலை-திருப்பதி தேவஸ்தான மே மாதத்திற்கான ஆராதனை சேவை டிக்கெட்டுகள் திங்கள் கிழமை 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இம்மாதம் 21ஆம் தேதி மின்னணு சேவை டிக்கெட்டுகளுக்கு 10 மணி ஆன்லைனில் பதிவு செய்யலாம். மேலும், இம்மாதம் 22ஆம் தேதி மெய்நிகர் சேவையையும், ஸ்ரீவாணி, அங்க பிரதட்சனை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன ஒதுக்கீட்டை 23ஆம் தேதியும், சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் அறை ஒதுக்கீட்டை 24ஆம் தேதியும் தேவஸ்தானம் வெளியிடுகிறது.
Tags :