டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் கிடைத்தது

by Staff / 01-11-2023 12:17:50pm
டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் கிடைத்தது

சிறையிலுள்ள பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டிருந்தார். காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்று தனது பைக்கில் ஆபத்தான முறையில் 'வீலீங்' செய்திருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் டிடிஎஃப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து காயமடைந்தார்.

 

Tags :

Share via