சுற்றுலா மையம் அனுமதி ரத்து
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சாஸ்தாகோவில், அய்யனார்கோவில், செண்பகத்தோப்பு பகுதிகள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணத்தினால் மூடப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகளுக்கு சாஸ்தாகோவில், அய்யனார்கோவில், செண்பகத்தோப்பு பகுதிகளுக்கு அனுமதி கிடையாது.என்றும், எனவே சுற்றுலா பயணிகள் வன பகுதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். என்றும்,பொங்கல் தினத்தை முன்னிட்டு வன பணியாளர்கள் மூன்று தினங்களும் இரவு ழுழுவதும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும்,வன விலங்குகள் வேட்டையில் ஈடுபடும் நபர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டபடி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் துணை இயக்குனர் டாக்டர்.தீலீபகுமார் தெரிவித்துள்ளார்கள்.
Tags :



















