இன்று தமிழக வெற்றி கழகத்தலைவர் விஜய் சி.பி. ஐ அலுவலகத்தில் விசாரணையில் ....
நேற்று தனி விமானத்தின் மூலம் டெல்லி சி.பி .ஐ.அலுவலகத்தில் ஆஜராக சொல்லிருந்த தமிழக வெற்றி கழகத்தலைவர் விஜய் இன்று சி.பி.ஐ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். கரூர் பரப்பரை கூட்டத்தின் பொழுது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருகிறது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் , ஆதவ் அர்ஜுன், நிர்மல் குமார் உள்ளிட்டோா்சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரான நிலையில், கட்சி தலைவர் விஜய்க்கும் சமன் அனுப்பியிருந்தது. அவர் ஜனவரி 12-ஆம் தேதி சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகி இருந்தார். மீண்டும் 19-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ சமன் அனுப்பி இருந்தது. அதன் காரணமாக அவர் இன்று சி.பி. ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
Tags :


















