கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கும் தொடர் நிலைச்செல்விகளும் ஏற்பட்டு மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக மாறி உள்ளது.இந்த இயற்கை பேரிடர் காரணமாக இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் பலர் காணாமல் போய் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கி வைக்கப்பட்டுள்ளன. பெரும் மழையின் காரணமாக மத்தளம் திட்டம் மாவட்டத்தின் ரான்னி மற்றும் வயநாடு கல்லாடி சுரங்கப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவுகளும் ஏற்பட்டு போக்குவரத்தை முழுவதுமாக துண்டித்துள்ளது. வெள்ளப்பெருக்கு அதிகரித்ததின் காரணமாக இடுக்கியில் உள்ள மலங்கரா அணை உள்ளிட்ட பல முக்கிய அணைகளின் உபரி நீர் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. கடலோரப் பகுதிகளான கொச்சி செல்லானம் ஆலப்புழா காசர்கோடு போன்ற இடங்களில் கடல் நீர் ஊடுருவல் காரணமாக கடலோர வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நிலை தேர்வு அபாயம் இருப்பதாலும் நிறை புத்தரி பூஜைக்கு வருவதை தவிர்க்குமாறு ஐயப்ப பக்தர்களுக்கு திருவாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பொருட்டு தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் மேற்கு குழு இணைந்து பொதுமக்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :



















