மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே தமிழக எம்.பி-க்கள் தர்ணா

by Staff / 01-02-2023 03:45:10pm
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே தமிழக எம்.பி-க்கள் தர்ணா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்குப் பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் 90 நிமிடங்கள் வாசித்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து நாடாளுமன்ற தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, கையில் AIIMS என்று எழுதப்பட்ட செங்கல் ஏந்தி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து தமிழ்நாட்டு எம்.பிக்களான மாணிக்கம் தாக்கூர், கார்த்தி சிதம்பரம், விஜய்வசந்த், செல்லக்குமார், ஞானதிரவியம், சு.வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்டோர் முழக்கங்கள் எழுப்பினர்.

 

Tags :

Share via

More stories

Logo