சுடுகாட்டில் சிறுமி பாலியல் பலாத்காரம்

by Staff / 01-02-2023 03:55:36pm
சுடுகாட்டில் சிறுமி பாலியல் பலாத்காரம்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இளைஞர் ஒருவர், தனது வீட்டில் வேலை செய்யும் சிறுமியை சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் செவ்வாய்கிழமை நடந்ததாக தெரிகிறது. இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமிக்கு அவர் மிரட்டலும் விடுத்துள்ளார். அந்த சிறுமி இச்சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் கூறியதையடுத்து, அவர்கள் போலீசிடம் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo