குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலம் வனப்பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக குற்றால மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது மேலும் இரவு ஒன்பது மணிக்கு மேல் குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவியில் குளிப்பதற்கு காவல்துறை தடை விதித்தது பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியதால் இரவு நேரம் என்பதாலும் விதிக்கப்பட்ட தடை இன்று காலை வரை நீடித்தது இந்த நிலையில் வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம் குற்றாலம் பேரருவியில் அதிகரித்து காணப்பட்டது இதன் காரணமாக காவல்துறை இன்று சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குற்றாலம் மெயின் அருவியில் குளித்து வருகின்றனர் மேலும் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதி வருகிறது அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
Tags :