நாளை டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்தில் த.வெ.க தலைவர் விஜய் , ஆஜராகுமாறு புதிய சம்மன்
த.வெ.க தலைவர் விஜய் , நாளை டெல்லியில் உள்ள சி.பி.ஐ.தலைமையகத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடந்த விஜய்யின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக விஜய் ஏற்கனவே ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சி.பி.ஐ முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் பணிகள், வேட்பாளர் தேர்வு மற்றும் தனிப்பட்ட சட்ட நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் ஆஜராகுவதற்கு 10 நாட்கள் கால அவகாசம் கேட்டு விஜய் தரப்பில் கடிதம அனுப்பப பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தியுள்ளது.
Tags :


















