சென்னை உயர்நீதி மன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகள் பதவியேற்பு

by Admin / 10-08-2026 01:47:43am
சென்னை உயர்நீதி மன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர்நீதி மன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகள் உயர் நீதிமன்ற வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் தலைமை நீதிபதி சுஷ்ரூத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளில் எண்ணிக்கை 75 ஆகும்.புதிய 15 நீதிபதிகளின் வருகையால் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

 புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவின்  பேரில் நியமிக்க ப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் நிரந்தர நீதிபதிகளாகவும் மூன்று பேர் கூடுதல் நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏழு மாவட்ட நீதிபதிகளுக்கு கூடுதல் நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர நீதிபதிகளாக கே. கோவிந்தராஜன், ரஜினி பத்தியில் ,என் .ரமேஷ், ஜி. கே. முத்துகுமார், ராமகிருஷ்ணன், ராஜேஷ், விவேகானந்தர் ஆகியோ அடங்குவர்.

வழக்கறிஞர்களாக இருந்து எஸ் .ரவிக்குமார் ,என் திலீப் குமார் ,எ. மனோகரன் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்

. நீதித்துறையில் உள்ள டாக்டர் பி. முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, திருமகள் சந்திரசேகர், எஸ். கார்த்திகேயன், பி. முருகேசன், என். குணசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo