தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தனி தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தனி தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. பாஜகவை சேர்ந்த ஒரு உறுப்பினர் தவிர்த்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் எம் மசோதாவிற்கு ஆதரவை அளித்தன. நீட் தேர்வுகடந்த 12 ஆண்டு கால பள்ளி படிப்பை அர்த்தமற்றதாக்கி விடுவதாகவும் இதன் காரணமாக கிராமப்புற மற்றும் தமிழ் வழி மாணவர்களை பாதிப்படைய செய்து சமூக ஏற்ற தாழ்வுக்கு வழிவகை செய்வதாகவும் தெரிவித்ததோடு நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைத்ததோடு தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தீருமானத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருள்ராஜ் பேரவையில் தாக்கல் செய்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா பதிவுக்கால முடிவடைந்த அல்லது ரத்து செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களை அரசை கையகப்படுத்த வழிவகை செய்கிறது என்றும் இது சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் மற்றும் சமூக நல அமைப்புகளின் சுயாட்சியை பாதிக்கக் கூடியதாக உள்ளதாகவும் நீதி மாநிலங்களின் கூட்டாட்சி தத்துவம் சொத்துரிமை பாதுகாப்பு ஆகியவற்றைச் சட்ட மசோதா எதிராக இருப்பதனால் இதை திரும்பப் பெற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தீர்மானத்தை தாக்கல் செய்தார். தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டதனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜனை தவிர அனைவரும் இரண்டு மசோதாவிற்கும் ஆதரவளித்தனர்.
Tags :


















