மாநிலக் கல்லூரியில் போதை பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வு- தமிழக முதலமைச்சர் விஜய்
சென்னை மாநிலக் கல்லூரியில் நடந்த போதை பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வு தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மாணவர்களுடன் போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டார். பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் பொழுது போதைப்பொருள் தடுப்பு சட்ட கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார். அத்துடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய மூன்று போதை பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மூன்று தன்னார்வ குழுக்களுக்கு கோப்பைகளும் பாராட்டு சான்றிதழ்களும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 80 ஆயிரம் கிலோ போதைப் பொருள்களை அழிக்கும் காணொளி காட்சியை முதலமைச்சர் பார்வையிட்டார். கல்வி நிறுவனங்களில் போதை பழக்கத்தை ஒழிக்கும் முகமாக 2026 27 ஆண்டில் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தமிழக அரசு செய்துள்ளது. போதை பொருள் புழக்கத்தை புகார் அளிப்பதற்கு என்று புதிய செயலி உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
Tags :



















