கட்சி எம்பியை கண்டுக்காமல் சென்ற ராகுல் காந்தி
பிரதமர் மோடி குறித்தான அவதூறு வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி திடீர் விசிட்டாக நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார். ராகுல் காந்தியின் இந்த திடீர் விசிட்டால் பாராளுமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு உண்டாகியது. மேலும் அவர் வளாகத்திற்கு நுழையும்போது ராகுலுக்கு கை கொடுக்க முயன்ற கார்த்தி சிதம்பரம் எம்.பியை கண்டுக்காமல் அவர் சென்றது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றி கார்த்தி சிதம்பரமும் பெரிய அலட்டல் இல்லாமல் கைபேசியை பார்த்துக் கொண்டே கேஷுவலாக படி இறங்கி வருவது போல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Tags :