சிம்புவுடன் கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்..

மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் தக்லைப் படத்தில் நடித்து வரும் சிம்பு அவருடைய 49 வது படத்தை பார்க்கிங் படத்தை இயக்கி புகழ்பெற்ற ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் இவரோடு காமெடியனாக கலக்கி கொண்டு ஹீரோவாக வலம் வந்த சிம்புவால் திரையுலகத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தானம் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் .இவரோடு டிராகன் படத்தின் நாயகியாக நடித்து இளைஞர்களின் மனசை கொள்ளை கொண்ட கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.. சாய் அபயன்கர் இசையமைக்க உள்ள இந்தப் படத்திற்குப் பிறகு சிம்பு தன் சொந்த தயாரிப்பில் 50-வது படத்தையும் 51-ஆவது படத்தை டிராகன் பட இயக்குனர் இயக்க உள்ள படத்திலும் நடிக்க உள்ளார்.
Tags :